
புதுதில்லி: தில்லியில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், செப்டம்பர் 15ம் தேதி வரை 18 ஆயிரம் நபர்களுக்கு அபராதம் செலுத்துமாறு காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மதுபோதையில் வாகனம் ஓட்டுவதாகும். எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தடுப்பு நடவடிக்கையாக தண்டனை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி வரை சுமார் 18,478 அபராத சலான்களை போலீஸார் வழங்கியுள்ளனர். இந்த எண்ணிக்கை 2023ல் சுமார் 16,235 ஆக இருந்ததாகவும் அதுவே 2022ல் 2,320 ஆகவும் இருந்துள்ளது.
மேற்கு மாவட்டத்தில் 1973 பேர்களுக்கும், தென்கிழக்கு மாவட்டத்தில் 1902 பேர்களுக்கும், மத்திய தில்லியில் 1752 பேர்களுக்கும், தெற்கு தில்லியில் 1733 பேர்களுக்கும், வடக்கு தில்லி 1731 பேர்களுக்கும், வடக்கு (புறநகர்) தில்லி 1384 பேர்களுக்கும், ஷாஹ்தாரா மாவட்டத்தில் 540 நபர்களுக்கும் அதே வேளையில் கிழக்கு தில்லியில் 1382 பேர்களுக்கு விதிமீறல் அபராத சலான்கள் வழங்கப்பட்டது.
குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும் என போலீஸார் வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தியுள்ளனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுவது ஓட்டுநரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், சாலைகளில் பாதசாரிகள் மற்றும் பிற வாகன ஓட்டிகளின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.