கொல்கத்தாவில் 4வது நாளாகத் தொடரும் மருத்துவர்கள் உண்ணாவிரதம்!

இளநிலை மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் 4வது நாளாகத் தொடர்ந்து வருகிறது.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்கள்
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்கள்பிடிஐ
Published on
Updated on
1 min read

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் நீதி வேண்டி இளநிலை மருத்துவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் 4வது நாளாகத் தொடர்ந்து வருகிறது.

கொல்லப்பட்ட மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், மருத்துவமனையில் பாதுகாப்பை மேம்படுத்துவது, பணியிடங்களில் உரிய வழிமுறைகளைப் பிறப்பிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இளநிலை மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவிக்கும் வகையில் மாநில அரசு, அவர்களை சந்திக்க மறுத்ததால், போராட்டத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் வகையில் உண்ணாவிரதத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை, கடந்த சனிக்கிழமை இரவு அரசுத் தரப்பினர் சந்திப்பதாக இருந்தது. ஆனால், அவர்கள் அந்த சந்திப்பை புறக்கணித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளைச் சேர்ந்த முதுநிலை மருத்துவர்கள் இன்று (அக். 8) பேரணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க | ஹரியாணாவில் பாஜக; ஜம்மு-காஷ்மீரில் இந்தியா கூட்டணி ஆட்சி!

கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் இருந்து காலை 11 மணியளவில் பேரணி தொடங்கியது.

இதில் பங்கேற்று பேசிய முதுநிலை மருத்துவர் புன்யபரதா குன் பேசியதாவது,

துர்கா பூஜை விடுமுறையை வீட்டில் அமர்ந்தபடி எங்களால் கழிக்க முடியாது. அவர்களின் (இளநிலை மருத்துவர்கள்) கோரிக்கைகள் உண்மையானவை, தர்க்கரீதியானவை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மகத்தான ஒரு தீர்வுக்காக போராடும் இளைஞர்களை நாங்கள் ஆதரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இளநிலை மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் 50 பேர் இன்று தங்களின் ராஜிநாமா கடிதத்தை நிர்வாகத்திடம் வழங்கினர்.

அரசு மருத்துவமனைகளின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைவர்கள் கூட்டத்தில் இன்று காலை இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com