ஹரியாணாவில் பாஜக; ஜம்மு-காஷ்மீரில் இந்தியா கூட்டணி ஆட்சி!

ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியும் ஹரியாணாவில் பாஜகவும் ஆட்சி அமைக்கின்றன.
ஹரியாணாவில் பாஜக; ஜம்மு-காஷ்மீரில் இந்தியா கூட்டணி ஆட்சி!
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியும் ஹரியாணாவில் பாஜகவும் ஆட்சி அமைகின்றன.

ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று(அக். 8) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜம்மு-காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின், 90 பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக (செப். 18, 25, அக்.1) தேர்தல் நடைபெற்றது.

அதன்படி வாக்கு எண்ணிக்கையில், ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி(இந்தியா கூட்டணி) ஆட்சி அமைக்கிறது.

மாலை 4 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 90 தொகுதிகளில் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், பாஜக - 29, மக்கள் ஜனநாயகக் கட்சி - 3, மக்கள் மாநாட்டுக் கட்சி - 1, ஆம் ஆத்மி - 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1 சுயேச்சை - 7 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகிறது.

ஹரியாணா

ஹரியாணாவில் 90 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த அக். 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

மாலை 4 மணி நிலவரப்படி, பாஜக - 50, காங்கிரஸ் - 35, இந்திய தேசிய லோக் தளம் - 2 சுயேச்சை- 3 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

இதையடுத்து ஹரியாணாவில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.

58 ஆண்டு கால வரலாற்றில் ஒரு கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com