தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான அடுத்த சுற்று தயார்.. ஜார்கண்ட், மகாராஷ்டிரத்துக்கு தேர்தல்

பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான அடுத்த சுற்று தயார் ஆகிவருகிறது. ஜார்கண்ட், மகாராஷ்டிரத்துக்கு தேர்தல் விரைவில்.

News image
பாதுகாப்பில் ஈடுபட்ட சிஆர்பிஎப் வீரர்கள் - கோப்பிலிருந்து..
Updated On :11 அக்டோபர் 2024, 12:35 pm

DIN

மகாராஷ்டிரம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படவிருப்பதை முன்னிட்டு, மத்திய ஆயுதப் படைக் காவலர்களின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போதுதான், ஹரியாணா மற்றும் ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான அடுத்த சுற்று தயாராகிவிட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஜார்கண்ட் மாநில பாதுகாப்புப் பணிக்கு 100 தொழிற்படையினரை தேர்தல் ஆணையம் கோரியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது முதற்கட்ட பாதுகாப்புப் பணிக்காக மட்டுமே என்றும், தேர்தல் ஆணையம், மாநிலங்களின் பேரவைத் தேர்தல் தேதிகளை அறிவித்துவிட்டால், கூடுதலாக படைகள் பாதுகாப்புப் பணிக்கு ஈடுபடுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

தற்போதைக்கு மகாராஷ்டிர மாநிலத்துக்கு, முன்கூட்டியே படைகளை அனுப்புவது குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை என்றாலும், மத்திய ஆயுதப் படை வீரர்கள் மாநிலத்துக்கு அனுப்பும் பணி தொடங்கிவிட்டதாகவும், ஏற்கனவே சிஏபிஎஃப் வீரர்கள் மாநிலத்திலேயே இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிர மாநிலம் பரப்பளவில் பெரியது என்பதால், இரண்டு தவணைகளாக சிஏபிஎஃப் படையினர் பாதுகாப்புப் பணிக்காக அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.