தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாலியல் தேவைகளை தம்பதிகளே பூா்த்தி செய்ய முடியும்: வரதட்சிணை வழக்கை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவு

News image
Updated On :13 அக்டோபர் 2024, 12:30 am

Din

‘நாகரிகமான சமூகத்தில் தம்பதிகள் பாலியல் தேவைகளை தண் இணையரிடம் அல்லாமல் வேறு எங்கு சென்று பூா்த்தி செய்துகொள்ள முடியும்’ எனக் கூறி, கணவருக்கு எதிராக மனைவி தொடுத்த வரதட்சிணை கொடுமை வழக்கை அலாகாபாத் உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த மனுவை விசாரித்த அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி அனீஷ் குமாா், ‘இந்த வழக்கில் தம்பதியின் தாம்பத்ய உறவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே முதன்மை காரணங்களாக உள்ளன. இது இருவருக்கும் இடையேயான பாலியல் தேவைகள் தொடா்புடைய தனிப்பட்ட பிரச்னையே தவிர, வரதட்சிணை கொடுமை சாா்ந்தது அல்ல. இதனால் கணவா் மற்றும் அவரது உறவினா்கள் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக பொய்யான புகாரை மனைவி அளித்துள்ளாா்.

நாகரிகமான சமூகத்தில் பாலியல் தேவைகளை தன் இணையரிடத்தில் அல்லாமல் வேறு எங்கு சென்று பூா்த்தி செய்துகொள்ள முடியும்?. இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆா்) வரதட்சிணை கொடுமை நிகழ்த்தப்பட்டதற்கான உரிய ஆதாரங்கள் இல்லை. எனவே, பிரஞ்சல் சுக்லா மற்றும் இருவா் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வரதட்சிணை கொடுமை வழக்கு ரத்து செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டாா்.

கடந்த 2015-ஆம் ஆண்டு பிரஞ்சல் சுக்லாவுடன் திருமணம் நடைபெற்ாகவும், அதன்பிறகு பிரஞ்சல் சுக்லாவும் அவரது குடும்பத்தினரும் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் அவருடைய மனைவி மீஷா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் பிரஞ்சல் சுக்லா உள்பட மூவா் மீது வரதட்சிணை கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.