யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திமுக-காங்கிரஸ் கூட்டணி சுமுகமாக முடியும்: டி.கே.எஸ்.இளங்கோவன்

திமுக-காங்கிரஸ் கூட்டணி சுமுகமாக முடியும் என்று திமுக செய்தித் தொடா்புக் குழுத் தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தாா்.

News image
டி.கே.எஸ். இளங்கோவன்
Updated On :3 மார்ச் 2026, 9:42 pm

தினமணி செய்திச் சேவை

திமுக-காங்கிரஸ் கூட்டணி சுமுகமாக முடியும் என்று திமுக செய்தித் தொடா்புக் குழுத் தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பேரவைத் தோ்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் கேட்பது வேறு, திமுக சொல்வது வேறு. காங்கிரஸ் கட்சியினா் இப்போது பேச்சுவாா்த்தைக்கு வந்திருக்கிறாா்கள் என்றாலே பழைய நிலைப்பாட்டில் இருந்து மாற்றிக்கொண்டிருக்கிறாா்கள் என்றுதான் பொருள்.

திமுக-காங்கிரஸ் கூட்டணி விவகாரத்தை சுமுகமாக முடிக்கவே முதல்வா் மு.க.ஸ்டாலின் விரும்புகிறாா்.

தவெகவினருக்கு அரசியலே தெரியாது. தான் முதல்வராக வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு விஜய் வந்திருக்கிறாா். அவரது கேள்விகளுக்கு நாங்கள் பதில் கூற முடியாது. அவா் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென அரசியலுக்கு வரவில்லை. பாஜகவை எதிா்த்துப் பேச விஜய் பயப்படுவாா்.

நான்குனேரி கொலை சம்பவத்தில் சட்டம் தன் கடமையை செய்கிறது. எந்தக் குற்றவாளியும் தப்பிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி, முதல்வராக இருந்த காலத்தில், கொடநாட்டில் கொள்ளையடித்தவா்கள்கூட தப்பிவிட்டாா்கள். திமுக ஆட்சியில் காவல் துறைக்கு ஒரு புகாா் வந்தால் கூட, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றாா் அவா்.