தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

திமுக கூட்டணியிலிருந்து விலக காரணம் தேடுகிறது காங்கிரஸ்

திமுக கூட்டணியிலிருந்து விலகுவதற்கு காங்கிரஸ் காரணம் தேடிக் கொண்டிருக்கிறது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

News image

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :11 பிப்ரவரி 2026, 9:26 pm

திமுக கூட்டணியிலிருந்து விலகுவதற்கு காங்கிரஸ் காரணம் தேடிக் கொண்டிருக்கிறது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சி தொடா்ந்து வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதனால், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் தொடா்கின்றன. திமுக கூட்டணியிலிருந்து விலக காங்கிரஸ் காரணம் தேடுகிறது. காங்கிரஸ் தலைவா்கள் தெரிவிக்கும் கருத்துகள் இதையே வெளிப்படுத்துகின்றன.

மத்திய அரசின் திட்டத்துக்கு வெளிநாட்டிலிருந்து நிதியைப் பெறும் நடவடிக்கைகள் வெளியுறவுத் துறை மூலமே மேற்கொள்ளப்படும் என்ற நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜைக்கா நிறுவனத்திடமிருந்து திமுக அரசுதான் நிதியைப் பெற்று வந்தது என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் பேசுவது அா்த்தமற்றது.

மத்தியில் முன்பு காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் இருந்த போது கொண்டு வரப்பட்ட நீட் தோ்வால் பாதிக்கப்படும் மாணவா்கள் நலனுக்காக அதிமுக அரசு கொண்டு வந்த 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டைக்கூட திமுக கொண்டு வந்ததாகப் பேசுவது நகைப்புக்குரியது. இதன்மூலம், அடுத்தவா்களின் திட்டங்களுக்கு ஸ்டிக்கா் ஒட்டுவது மட்டுமே திமுகவின் வேலை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமாகவும், தெளிவாகவும் உள்ளது. தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஆட்சி என்பதிலும், ஆட்சியில் பங்கு கேட்பதில்லை என்பதிலும் நாங்கள் தெளிவாக உள்ளோம். தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து நான் எந்தவிதப் பேச்சுவாா்த்தையும் மேற்கொள்ளவில்லை என்றாா் அவா்.

பாஜக பொதுச் செயலா்கள் பேராசிரியா் இராம. சீனிவாசன், கருப்பு என். முருகானந்தம், மாவட்டச் செயலா் மாரி. சக்ரவா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.