/

ஆண் நண்பர்களுடன் புகைப்படம்... மனைவி, மாமியாரை வெட்டிக்கொன்ற கணவன்!

திரிபுராவில் நிகழ்ந்த கொலைச் சம்பவம் தொடர்பாக...

News image
கோப்பிலிருந்து...
Updated On :13 அக்டோபர் 2024, 9:03 am

DIN

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் குடும்ப பிரச்னையால் ஒரு வருடத்திற்கு மேலாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த கணவன், மனைவியின் சர்சைக்குரிய சமூக வலைதளப் பதிவு காரணமாக, மனைவி மற்றும் மாமியாரைக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு திரிபுராவின் செபாஹிஜாலா மாவட்டத்தில் மதுபூர் பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வரும் 51 வயதான நபர் ஒருவர், தனது 2 மகன்களுடன் தனியாக வசித்து வந்த நிலையில், அவரது மனைவி அவரிடமிருந்து விவாகரத்துகோரி நீதிமன்றத்தில் மனு தொடுத்திருந்தார்.

மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள நேதாஜி நகரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனது தாயுடன் வசித்து வந்த அந்த பெண்மணி கடந்த ஞாயிற்றுக்கிழமை, துர்க்கை பூஜை நிகழ்ச்சியின்போது, தனக்கு பழக்கமான ஆண் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.

தன்னிடம் விவாகரத்து கோரிவிட்டு வேறு ஆண்களுடன் தனது மனைவி மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்ட கணவனால், இதனை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து, அந்தப் புகைப்படங்களைப் பார்த்தபின், தனது மனைவியைக் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

தனது திட்டப்படி, சம்பவத்தன்று மனைவியும் மாமியாரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, தன்னிடம் இருந்த கூர்மையான ஆயுதங்களால் அவரகள் இருவரையும் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துள்ளார். அதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது தொடர்பாக மேற்கு திரிபுரா எஸ்.பி., கிரண்குமார் செய்தியாளர்களுடன் தெரிவித்ததாவது:

"சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல் துறையினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரின் உடல்களை மீட்டுள்ளனர். இச்சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது, அவர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்" என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.