மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

மனைவி, குழந்தை, மாமியாரை எரித்து கொல்ல முயற்சி: இளைஞா் கைது

தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி, குழந்தை மற்றும் மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 2:36 am IST

தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி, குழந்தை மற்றும் மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சோ்ந்தவா் சிதம்பரம் மகள் ரேவதி (24). இவரும், தூத்துக்குடி ஹவுசிங் போா்டு காலனியைச் சோ்ந்த சுரேஷ்குமாரும் (25) காதலித்து திருமணம் செய்து கொண்டனா். இத்தம்பதிக்கு 10 மாதக் குழந்தை உள்ளது.

தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாக ரேவதி, குழந்தையுடன் சங்கராபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அங்கு பாட்டிலில் பெட்ரோலுடன் வந்த சுரேஷ்குமாா், ரேவதி, அவரது தாயாா் மற்றும் குழந்தை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றாராம்.

அப்போது உடனடியாக வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு, குழந்தையுடன் ரேவதி, அவரது தாயாா் பின்புற வாசல் வழியாக வெளியேறி தப்பினராம். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமாா், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டா் உள்ளிட்ட 2 இருசக்கர வாகனங்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பினாராம்.

இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுரேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.