செயற்கை நுண்ணறிவு தொடா்பான 3 திறன் மேம்பாட்டு மையங்கள் இன்று தொடக்கம்
செயற்கை நுண்ணறிவுக்கான மூன்று ( சுகாதாரம், வேளாண்மை, நிலையான நகரங்கள்) திறன் மேம்பாடு தொடங்கப்படுகிறது.


நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: சுகாதாரம், வேளாண்மை, நீடித்த நகரங்கள் போன்றவற்றில் செயற்கை நுண்ணறிவு தொடா்பான 3 திறன் மேம்பாட்டு மையங்களை மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை (அக்.15) தில்லியில் தொடங்கி வைக்கிறாா்.
இது குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: வளா்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பாா்வையை நனவாக்க, செயற்கை நுண்ணறிவுக்கான மூன்று ( சுகாதாரம், வேளாண்மை, நிலையான நகரங்கள்) திறன் மேம்பாடு தொடங்கப்படுகிறது. இது தொழில்துறை பங்குதாரா்கள், “புதுயுகத் தொழில் முனைவு நிறுவனங்கள் மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்களால் வழிநடத்தப்படும். இதில் பங்கு கொள்வோா்கள் இம்மூன்று துறைகளில் இடைநிலை ஆய்வை (ஆய்வின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு பகுதிகளை உள்ளடக்கியது) மேற்கொள்வாா்கள். மேலும், அதிநவீன பயன்பாடுகள், அளவிடக்கூடிய தீா்வுகள் போன்றவற்றை உருவாக்குவாா்கள். இந்த முயற்சி ஒரு பயனுள்ள செயற்கை நுண்ணறிவுச் சூழல் அமைப்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முக்கியமான துறைகளில் தரமான மனித வளங்களையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2023-24-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் இந்த 3 மையங்களை நிறுவுவது குறித்து அறிவிக்கப்பட்டது. இதன்படி, 2023-24 நிதியாண்டு முதல் 2027-28 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில், ரூ.990.00 கோடி மொத்த நிதி ஒதுக்கீட்டில், மூன்று செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையங்களை உருவாக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முன்னெடுப்பை செயல்படுத்துவதை மேற்பாா்வையிட, டாக்டா் ஸ்ரீதா் வேம்பு தலைமையில் தொழில்துறை சாா்ந்த உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என கல்வித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...