கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

மும்பையில் 3 சா்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பையில் 3 சா்வதேச விமானங்களுக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், விமான நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

News image
ஏா் இந்தியா
Updated On :15 அக்டோபர் 2024, 12:57 am

DIN

மும்பை: மும்பையில் 3 சா்வதேச விமானங்களுக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், விமான நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

மும்பையில் இருந்து நியூயாா்க் செல்ல புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், ஓமனின் மஸ்கட் மற்றும் சவூதி அரேபியாவின் ஜெட்டா செல்ல தயாராக இருந்த இரு இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

மும்பை விமான நிலையத்தைவிட்டு புறப்பட்ட ஏா் இந்தியா விமானம் அவசரமாக தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இணையதளம் மூலம் இந்த மிரட்டல் வந்ததாகவும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதையடுத்து, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் முரளிதா் மொஹோல் தில்லி விமான நிலையத்துக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தாா். உரிய பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படும் அதே வேளையில், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகள் மற்றும் வசதியான தங்குமிடங்களை ஏற்பாடு செய்ய விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஏா் இந்தியா ஊழியா்களுக்கு அவா் உத்தரவிட்டாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

மும்பையில் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, உடனடியாக விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பயணிகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனா். ஆனால், இந்த சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று மும்பை காவல் துறையினா் தெரிவித்தனா். இதனால், மஸ்கட் செல்ல இருந்த விமானம் 7 மணி நேரமும், ஜெட்டா செல்ல இருந்த விமானம் 10 மணி நேரமும் தாமதமாகப் புறப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.