காபி
காபிகோப்புப் படம்

இந்தியாவின் காபி ஏற்றுமதி 55% அதிகரிப்பு!

ஏற்றுமதியில் 45 சதவீத காபியை ஜெர்மனி, ரஷியா, ஐக்கிய அரபு அமீரகம், பெல்ஜியம் ஆகிய நாடுகள் பயன்படுத்துகின்றன.
Published on

பல்வேறு நாடுகளுக்கான இந்தியாவின் காபி ஏற்றுமதி 55 சதவீதம் அதிகரித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் மட்டும் ரூ. 7,771.88 கோடி மதிப்புடைய காபி, ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் காபி ஏற்றுமதி ரூ. 4,956-ஆக மட்டுமே இருந்தது. இந்த நிதியாண்டில் இது 55 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் உற்பத்தியாகும் காபிக்கு சர்வதேச அளவில் வரவேற்பு கிடைத்துள்ளதும், அதன் விளைவாக ஏற்றுமதி அதிகரித்துள்ளதும் விவசாயத் துறையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.

2.2 லட்சம் டன் ஏற்றுமதி

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 2.2 லட்சம் டன் மதிப்புடைய காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 15 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு 1.91 லட்சம் டன் காபி மட்டுமே ஏற்றுமதியானது.

ஐரோப்பிய ஏற்றுமதி விதிமுறைகளுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் காபி விலையும் அதிகரித்துள்ளது. இந்திய காபி தூள் விலை கிலோவுக்கு ரூ.352 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.259-ஆக இருந்தது.

இந்திய காபி ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளில் அதிகபட்சமாக 20% இத்தாலி பயன்படுத்துகிறது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனி, ரஷியா, ஐக்கிய அரபு அமீரகம், பெல்ஜியம் ஆகிய நாடுகள் ஒட்டுமொத்தமாக, இந்திய ஏற்றுமதியில் 45% காபியை பயன்படுத்துகிறது.

இதையும் படிக்க | உலக உணவு நாள் இன்று! பேக்கிங் உணவுகளால் என்னென்ன ஆபத்து?

உற்பத்தியில் தமிழ்நாடு 3வது இடம்

2023 - 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் 3.6 லட்சம் மெட்ரிக் டன் காபி உற்பத்தி செய்யப்பட்டது.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் காபியில் 70% கர்நாடகத்திலிருந்து கிடைக்கிறது. நாட்டின் காபி உற்பத்தியில் கர்நடாகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கேரளத்தில் 20% கிடைக்கிறது. தமிழ்நாடு 5.7% உற்பத்தியுடன் 3வது இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com