தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி! இந்தியா மீது 100% வரி விதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு!ஃபிஃபா உலகக் கோப்பை! இறுதிப் போட்டியை நேரில் காண்கிறார் டிரம்ப்!தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,04,800-க்கு விற்பனைவிதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!2006-ல் அதிமுகவுடன், 2017-ல் திமுகவுடன்! இரு பெருந்தவறுகள் செய்துவிட்டேன்: வைகோதியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!
/

கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: 3 சிறுமிகள் நீரில் மூழ்கி பலி!

கால்வாயில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் நீரில் மூழ்கி பலி

News image

கோப்புப்படம்

Updated On :16 அக்டோபர் 2024, 9:05 pm IST

தெலங்கானாவில் கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் உயிரிழந்தனர்.

தெலங்கானாவின் மேடக் மாவட்டத்திலுள்ள சிவம்பேட் மண்டல் பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தங்கள் உறவினர் இல்லத் திருமண விழாவுக்கு செல்வதற்காக காரில் பயணித்துள்ளனர். இந்த நிலையில், திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும் வழியில், சிவம்பேட் மண்டல் பகுதியருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மரத்தில் மோதியதுடன், அருகே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த கால்வாயில் மூழ்கியது.

இந்த கோர விபத்தில், காரில் இருந்த 3 சிறுமிகள் உள்பட மொத்தம் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காரிலிருந்து இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர்களும் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, காயமடைந்தோருக்கு தேவைப்படும் சிகிச்சையளிக்க உரிய நடவடிகைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.