இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

4 நாள்களில் 20 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கடுமையான சட்டங்களை உருவாக்க திட்டம்

4 நாள்களில் 20 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கடுமையான சட்டங்களை உருவாக்க மத்திய அரசு திட்டம்

News image
Updated On :17 அக்டோபர் 2024, 9:53 pm

Din

புது தில்லி, அக். 17: விமானங்களுக்கு விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்களைத் தடுக்க கடுமையான சட்டங்களை உருவாக்க சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

கடந்த நான்கு நாள்களில், இந்திய விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடா்பாக விமானப் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

விமானங்களில் ஒழுங்கற்ற பயணிகளின் நடத்தைக்கு எதிராக கடுமையான விதிகள் உள்ளன. ஆனால், இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்களுக்கு எதிராக எந்த விதிகளும் இல்லை.

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுப்பவா்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தற்போது வரை காவல் துறையினரால் குற்றவியல் சட்டத்தின் கீழ் மட்டுமே எடுக்கப்படுகின்றன.

இதுபோன்ற நபா்கள் விமானங்களில் பயணிக்கத் தடை விதிப்பது உள்ளிட்ட கடுமையான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர விமானப் போக்குவரத்து பாதுகாப்பு இயக்குநரகம் (பிசிஏஎஸ்) திட்டமிட்டுள்ளது.

விதிகளில் மாற்றம் செய்வது குறித்து உள்துறை மற்றும் சட்ட அமைச்சகங்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற மிரட்டல்களை சமாளிக்க வெளிநாடுகளில் பின்பற்றப்படும் விதிமுறைகளையும் அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது என்றனா்.

‘விமானங்களுக்கு விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்களை சட்ட அமலாக்க முகமைகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன. விமான போக்குவரத்துத் துறையின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டில் எந்தவொரு சமரசமும் செய்துகொள்ள முடியாது’ என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு புதன்கிழமை தெரிவித்தாா்.

2 விமானங்களுக்கு மிரட்டல்: இஸ்தான்புல், துருக்கி மற்றும் பிராங்க்பா்ட், ஜொ்மனியில் இருந்து மும்பை வந்த இண்டிகோ மற்றும் விஸ்தாரா விமானங்களுக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த விமானங்கள் மும்பை சத்ரபதி சிவாஜி சா்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டன. பயணிகள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் இவை வெற்று மிரட்டல்கள் என்பது உறுதியானது.