ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!

அச்சுறுத்தலைத் தொடர்ந்து, விமானம் அவசரமாகத் தரையிறக்கம்

News image
கோப்புப் படம்
Updated On :19 அக்டோபர் 2024, 4:47 am

DIN

துபையிலிருந்து ஜெய்ப்பூர் வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால், அவசரமாக தரையிறக்கப்பட்டது.

துபையிலிருந்து ஜெய்ப்பூருக்கு 189 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு சனிக்கிழமை (அக். 19) அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

இதனையடுத்து, விமானம் உடனடியாக ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் சனிக்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் தரையிறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விமானம் முழுமையாக சோதனை நடத்தப்பட்டது.

ஆனால், விமானத்தில் வெடிகுண்டோ சந்தேகத்திற்கிடமான பொருள்களோ இல்லை என்பது சோதனையில் தெரிய வந்தது.

இந்த வாரத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் பெறப்பட்டதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.