நேபாளத்தில் சட்டவிரோதமாக ரூ. 20 லட்ச மேல் பணத்தை எடுத்துச் சென்ற இந்தியர்கள் இருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
நேபாள-இந்திய எல்லையில் வழக்கமான பாதுகாப்பு சோதனையின் போது, மகாராஷ்டிரத்தின் ராய்காட் மாவட்டத்தைச் சேர்ந்த சல்மான் குரேசியா 33 மற்றும் உமேஷ் சகாரம் கந்தக்லே 39, ஆகிய இருவரும் கபில்வஸ்து மாவட்டத்தின் கிருஷ்ணாநகர் பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து எந்த ஆதாரமும் இல்லாமல் மொத்தம் ரூ. 20,50,000 போலீஸார் மீட்டனர். கைது செய்யப்பட்ட அவர்கள் விசாரணைக்காக கபில்வஸ்து மாவட்டத்தில் உள்ள வருவாய் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இந்திய நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட தனி வாகனங்களில் இருவரும் பயணம் மேற்கொண்டிருந்தனர். முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.25,000 அல்லது அதற்கு மேல் ரொக்கமாக எடுத்துச் செல்வது நேபாளத்தில் சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குரானை காலால் மிதித்த விடியோ வைரல்: 2 பெண்கள் கைது!

நேபாள முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலி கைது!

நேபாளம்: சாலை விபத்தில் இரண்டு இந்தியர்கள் பலி

நேபாளம்: பேருந்து கவிழ்ந்து 7 இந்தியர்கள் பலி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


