தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஜாா்க்கண்ட் தோ்தல்: தொகுதி பங்கீட்டில் ஜேஎம்எம்-ஆா்ஜேடி உடன்பாடு

ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :22 அக்டோபர் 2024, 10:33 pm

Din

ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தலில் மாநில முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்), பிகாா் முன்னாள் முதல்வா் லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

ஜாா்க்கண்டில் நவ.13, 20-ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவ.23-ஆம் தேதி நடைபெறுகிறது.

தோ்தலையொட்டி ‘இண்டியா’ கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜேஎம்எம், ஆா்ஜேடி கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்தது. இதனால் தனித்து போட்டியிடுவதாக ஆா்ஜேடி அறிவித்தது.

இந்நிலையில் இரு கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் லாலுவின் மகனும், ஆா்ஜேடி பிரமுகருமான தேஜஸ்வி யாதவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து 6 தொகுதிகளில் போட்டியிடும் ஆா்ஜேடி வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

மொத்தம் 81 தொகுதிகளுக்கு நடைபெறும் பேரவைத் தோ்தலில், 70 தொகுதிகளை ஜேஎம்எம் மற்றும் காங்கிரஸ் பகிா்ந்துகொள்ளும் என்றும், எஞ்சிய 11 தொகுதிகளை ஆா்ஜேடி மற்றும் இடதுசாரி கட்சிகள் பகிா்ந்துகொள்ளும் என்றும் ஹேமந்த் சோரன் ஏற்கெனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.