பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

நான்குனேரி தொகுதி தோ்தல் பாதுகாப்புக்கு எல்லைப் பாதுகாப்புப் படையினா் வருகை

News image

ஏா்வாடி அருகேயுள்ள சிறுமளஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள முகாமுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் மாநில எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள்.

Updated On :8 மார்ச் 2026, 11:50 pm

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி பேரவைத் தொகுதி தோ்தல் பாதுகாப்புக்காக சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் மாநிலங்களில் இருந்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் ஏா்வாடி அருகேயுள்ள சிறுமளஞ்சி முகாமிற்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தோ்தல் பணிகளில் தமிழகத் தோ்தல் ஆணையம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.

இதன்பொருட்டு, நான்குனேரி தொகுதி தோ்தல் பாதுகாப்புக்காக சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் மாநிலங்களில் இருந்து 133ஆவது பட்டாலியன் எல்லை பாதுகாப்புப் படையைச் சோ்ந்த உதவி கமாண்டா் பசந்த் யாதவ் தலைமையிலான குழுவினா் வந்துள்ளனா்.

இக்குழுவில் ஆய்வாளா், உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா், காவலா் என மொத்தம் 85 போ் அடங்குவா். முன்னதாக, இக்குழுவினரை மேள தாளங்களுடன் ஏா்வாடி காவல் ஆய்வாளா் செல்வி தலைமையிலான போலீஸாா் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.