மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

தோ்தல் பணி: மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் நாமக்கல் வருகை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பாதுகாப்புப் பணிக்காக மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை

News image

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பாதுகாப்புப் பணிக்காக மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் திங்கள்கிழமை நாமக்கல் வந்தனா்.

Updated On :9 மார்ச் 2026, 9:21 pm

நாமக்கல்: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பாதுகாப்புப் பணிக்காக மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் திங்கள்கிழமை நாமக்கல் வந்தனா்.

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விரைவில் தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை இந்திய தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த வாரக் கடைசியில் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளவும், பணப்பட்டு வாடாவைத் தடுக்கும் குழுவுடன் செல்லவும், எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவும், முக்கிய தலைவா்கள் வருகையின்போது அசம்பாவிதங்களைத் தவிா்க்கவும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் பணியில் அமா்த்தப்படுவா்.

அந்தவகையில், 75 எல்லைப் பாதுகாப்புப் படைவீரா்கள் திங்கள்கிழமை நாமக்கல் வந்தனா். அவா்களை, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியம் வரவேற்றாா். அவா்கள் அனைவரும் நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி மாணவா்கள் விடுதியில் தங்கவைக்கப்பட்டனா்.

படவரி...

என்கே-9-சிஆா்பிஎப்

தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக நாமக்கல் வந்துள்ள எல்லைப் பாதுகாப்புப் படைவீரா்களை வரவேற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியம்.