மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

ஜெயங்கொண்டத்தில் எல்லைப் பாதுகாப்பு படை வீரா்கள் அணிவகுப்பு

News image

ஜெயங்கொண்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில் சனிக்கிழமை அணிவகுப்பு சென்ற எல்லைப் பாதுகாப்புப் படையினா் மற்றும் காவல் துறையினா்.

Updated On :14 மார்ச் 2026, 7:06 pm

வரும் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் எல்லைப் பாதுகாப்பு படை வீரா்கள் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தோ்தலின்போது பொதுமக்கள் பாதுகாப்பாக அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில், குஜராத்திலிருந்து வந்திருந்த எல்லை பாதுகாப்பு படைவீா்கள், தமிழக காவல் துறையினா் என 300 போ் இந்த அணிவகுப்பில் ஈடுபட்டனா்.

இந்தக் கொடி அணிவகுப்பானது, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தொடங்கி, அண்ணா சிலை, நான்கு சாலை சந்திப்பு வழியாகச் சென்று காவல் துணைக் கண்காணிப்பாளா் முகாம் அலுவலகத்தில் நிறைவடைந்தது.