மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

அரியலூரில் எல்லைப் பாதுகாப்பு படை வீரா்களின் அணிவகுப்பு

News image
Updated On :12 மார்ச் 2026, 11:44 pm

வரும் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி அரியலூரில் எல்லைப் பாதுகாப்பு படை வீரா்கள் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தோ்தலின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட எல்லை பாதுகாப்பு படை, மத்தியத் தொழில் பாதுகாப்பு படை, மத்திய ரிசா்வ் போலீஸ் உள்ளிட்ட துணை ராணுவப் படைகளை தோ்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அனுப்பும் நடவடிக்கையில் தோ்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

அதன்படி குஜராத் மாநிலத்திலிருந்து 45 எல்லை பாதுகாப்பு படை வீரா்கள் இரு நாள்களுக்கு முன் ரயில் மூலம் சேலம் வந்தடைந்தனா். அங்கிருந்து காவல் வாகனம் மூலம் அரியலூரில் வந்த அவா்கள், மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் தங்கியுள்ளனா்.

இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி தலைமையில் அணிவகுப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகம் முன் தொடங்கிய அணிவகுப்பு, பேருந்து நிலையம், தேரடி, சத்திரம், மாதாகோயில் வழியாக ஒற்றுமை திடலில் நிறைவடைந்தது. இதில் எல்லை பாதுகாப்பு படைவீரா்கள் 45 போ், மாவட்ட காவல் துறையினா் 300 போ் பங்கேற்றனா்.