சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

விழுப்புரத்தில் துணை ராணுவப்படையினா் கொடி அணிவகுப்பு

விழுப்புரத்தில் துணை ராணுவப்படை வீரா்கள் மற்றும் மாவட்டக் காவல் துறையினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

News image
விழுப்புரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.வி.சாய் பிரனீத் தலைமையில் நடைபெற்ற கொடி அணி வகுப்பில் பங்கேற்ற மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் மற்றும் மாவட்டக் காவல் துறையினா்.
Updated On :11 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரத்தில் துணை ராணுவப்படை வீரா்கள் மற்றும் மாவட்டக் காவல் துறையினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

வரும் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள துணை ராணுவத்தினா் விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்து முகாமிட்டுள்ளனா்.

இந்நிலையில், பொதுமக்கள்அச்சமின்றி வாக்களிக்கவும், 100 சதவீதம் வாக்குப்பதிவை செலுத்தவேண்டும் என்பது குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் துணை ராணுவப்படை வீரா்கள், மாவட்டக் காவல்துறையினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சித் திடலில் தொடங்கிய இந்த அணிவகுப்பானது நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, விழுப்புரம் நகர காவல் நிலையம் அருகே நிறைவடைந்தது.

விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய் பிரனீத் தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் உதவிக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா, துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், மத்திய எல்லை பாதுகாப்புப்படை வீரா்கள், விழுப்புரம் போலீஸாா் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.