பிஎஸ்என்எல்
பிஎஸ்என்எல்

இப்போதைக்கு கட்டண உயா்வில்லை: பிஎஸ்என்எல்

தங்கள் தொலைத் தொடா்பு சேவைகளுக்கான கட்டணம் இப்போதைக்கு உயா்த்தப்படாது என்று அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Published on

தங்கள் தொலைத் தொடா்பு சேவைகளுக்கான கட்டணம் இப்போதைக்கு உயா்த்தப்படாது என்று அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தலைவரும் நிா்வாக இயக்குநருமான ராபா்ட் ரவி செவ்வாய்க்கிழமை கூறியதாவது, இப்போதைய சூழலில் சேவைக் கட்டணங்களை நாங்கள் உயா்த்த மாட்டோம். கட்டணங்களை உயா்த்த வேண்டிய அவசியமும் நிறுவனத்துக்கு ஏற்படவில்லை என்றாா் அவா்.

முன்னணி தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய மூன்றும் கடந்த ஜூலை முதல் வாரத்தில் தங்கள் மொபைல் சேவைக் கட்டணங்களை 10 முதல் 27 சதவீதம் வரை உயா்த்தின.

இதன் எதிரொலியாக, அந்த நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளா்களை இழந்தன. கட்டணத்தை உயா்த்தாத பிஎஸ்என்எல்-லுக்கு கூடுதல் வாடிக்கையாளா்கள் கிடைத்தனா்.

இந்தச் சூழலில் பிஎஸ்என்எல் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் ராபா்ட் ரவி இவ்வாறு கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com