எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அமைதியை நிலைநாட்ட இந்தியா ஒத்துழைக்கும்: பிரதமர் மோடி

ரஷியா - உக்ரைன் விவகாரத்தில் அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா ஒத்துழைப்பு வழங்கும்

News image
நரேந்திர மோடி / விளாதிமீர் புதின்- PTI
Updated On :22 அக்டோபர் 2024, 4:36 pm

DIN

ரஷியா - உக்ரைன் விவகாரத்தில் அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 22) தெரிவித்தார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு ரஷியா தலைமையில் அந்நாட்டின் கசான் நகரத்தில் இன்றும் (அக். 22) நாளையும் (அக். 23) நடைபெறுகிறது.

மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், ஈரான் நாட்டின் அதிபா் மசூத் ரஜாவி உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா். இதற்காக பிரதமர் மோடி ஒன்று காலை ரஷியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமைதியை நிலைநாட்ட ஒத்துழைப்பு

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மோடி பேசியதாவது,

''ரஷியா - உக்ரைன் பிரச்னையில் அனைத்து தரப்பினருடனும் இந்தியா தொடர்பில் உள்ளது. அனைத்து முரண்களுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்பதே எங்களின் நிலைப்பாடாக உள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான மோதல்களுக்கு அமைதியான தீர்வுகள் இருக்க வேண்டும் என்று இந்தியா நம்புகிறது. அமைதியை நிலைநாட்ட இந்தியா எப்போதும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

கடந்த 3 மாதங்களில் 2-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மோடியுடனான பேச்சுவார்த்தையின்போது இதனை ரஷிய அதிபர் புதினும் நினைவு கூர்ந்தார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.