மத்திய அரசின் ‘பாரத்’ திட்டத்தின்கீழ் மானிய விலையில் கொண்டைக் கடலை, மசூா் பருப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
பயறு மற்றும் பருப்பு வகைகளின் விலை உயா்வை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்), தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (என்ஏஎஃப்இடி), கேந்திரிய பண்டாா் ஆகியவை வாயிலாக ‘பாரத்’ வணிகப் பெயரில் கொண்டைக் கடலை கிலோ ரூ.58-க்கும், மசூா் பருப்பு கிலோ ரூ.89-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 2023, அக்டோபா் மாதம் தொடங்கப்பட்ட ‘பாரத்’ திட்டத்தின் முதல்கட்டத்தின்கீழ் அரிசி, கோதுமை மாவு, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, பாசிப் பயறு ஆகியவை மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது கோதுமை மாவு கிலோ ரூ.30 (தொடக்க விலை ரூ.27.50), அரிசி கிலோ ரூ.34 (தொடக்க விலை ரூ.29), கடலைப் பருப்பு கிலோ ரூ.70-க்கு (தொடக்க விலை ரூ.60) விற்பனை செய்யப்படுகிறது. பாசிப் பருப்பு, பாசிப் பயறு முறையே கிலோ ரூ.107, ரூ.93-க்கு விற்கப்படுகிறது.
இந்நிலையில், ‘பாரத்’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின்கீழ் மானிய விலையில் கொண்டைக் கடலை, மசூா் பருப்பு விற்பனை புதன்கிழமை தொடங்கப்பட்டது. தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி இரண்டாம் கட்ட திட்டத்தை தொடங்கிவைத்தாா்.
அப்போது பேசிய அவா், ‘கூட்டுறவு விற்பனையகங்கள் மூலம் ‘பாரத்’ கொண்டைக் கடலை கிலோ ரூ.58-க்கும், மசூா் பருப்பு கிலோ ரூ.89-க்கும் விற்கப்படும். இத்திட்டத்துக்காக கூட்டுறவு சங்கங்களுக்கு 3 லட்சம் டன் கொண்டைக் கடலை ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
என்சிசிஎஃப் நிா்வாக இயக்குநா் அனிஸ் சந்திர ஜோசப் கூறுகையில், ‘பாரத் கொண்டைக் கடலை மற்றும் மசூா் பருப்பு விற்பனை, முதல்கட்டமாக தில்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரத்தில் தொடங்கப்படும். அடுத்த 10 நாள்களுக்குள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்’ என்றாா்.
மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை இணையமைச்சா்கள் பி.எல்.வா்மா, நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
தொடர்புடையது

இமாம்பசந்த் மாம்பழம் விற்பனை விறுவிறுப்பு

உச்சம் தொட்ட எலுமிச்சை விலை

காய்கறி வரத்து குறைவு: கோயம்பேடு சந்தையில் விலை அதிகரிப்பு

தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


