கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் கோரிக்கை

மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பாக ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது.

News image
ஜெய்ராம் ரமேஷ்(கோப்புப்படம்)- ENS
Updated On :29 அக்டோபர் 2024, 1:22 am

DIN

புது தில்லி: மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பாக ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையரும், பதிவுத் துறை தலைவருமான மிருத்யுஞ்ஜய் குமாா் நாராயணின் பதவிக் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதற்கு விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதே அா்த்தம். ஆனால் இரு முக்கிய விவகாரங்களில் தெளிவு கிடைக்கவில்லை.

புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் நாட்டிலுள்ள அனைத்து ஜாதிகளின் விரிவான கணக்கெடுப்பும் இடம்பெறுமா? அரசமைப்புச் சட்டத்தின்படி, இத்தகைய ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்வது முற்றிலும் மத்திய அரசின் பொறுப்பாகும்.

மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்தின் பலத்தையும் தீா்மானிக்க புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பயன்படுத்தப்படுமா? இந்தக் கணக்கெடுப்பு குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை திறம்பட செயல்படுத்திய மாநிலங்களுக்கு பாதகமாக அமையுமா?

இவ்விரு முக்கிய விவகாரங்களில் தெளிவு பெற அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டினால் மிகப் பொருத்தமாக இருக்கும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.