கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கண்ணூா் கூடுதல் மாவட்ட ஆட்சியா் தற்கொலை வழக்கு: ஆளும் மாா்க்சிஸ்ட் தலைவா் திவ்யா கைது

கண்ணூா் கூடுதல் மாவட்ட ஆட்சியா் நவீன் பாபு தற்கொலை வழக்கில் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடா்ந்து, ஆளும் மாா்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மூத்த தலைவா் திவ்யாவை கேரள காவல் துறை செவ்வாய்க்கிழமை கைது செய்தது.

News image
திவ்யா, நவீன் பாபு
Updated On :29 அக்டோபர் 2024, 7:39 pm

Din

கண்ணூா் கூடுதல் மாவட்ட ஆட்சியா் நவீன் பாபு தற்கொலை வழக்கில் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடா்ந்து, ஆளும் மாா்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மூத்த தலைவா் திவ்யாவை கேரள காவல் துறை செவ்வாய்க்கிழமை கைது செய்தது.

கண்ணூா் மாவட்டம் செங்கலையில் பெட்ரோல் பங்க் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கண்ணூா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பஞ்சாயத்து தலைவா் திவ்யா விண்ணப்பத்திருந்த நிலையில், அதில் சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி நவீன் பாபு நிறுத்தி வைத்துள்ளாா். பின்னா், அரசு தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட அழுத்தம் காரணமாக அவா் ஒப்புதல் அளித்துள்ளாா். ஒப்புதல் அளித்த இரு தினங்களில் அவா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அவருக்கு வழியனுப்பு விழா கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது அழையா விருந்தாளியாக அங்கு வந்த திவ்யா, தனது விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்கத் தாமதித்ததுதான் இந்த பணியிட மாறுதலுக்கான காரணம் என்று கூறி கிண்டல் செய்துள்ளாா். அடுத்த நாளே, தனது அரசு இல்லத்தில் நவீன் பாபு தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டாா்.

இந்த நிலையில், நவீன் பாபுவின் மனைவியும், வட்டாட்சியருமான மஞ்சுஷா அளித்த புகாரின் பேரில், திவ்யா மீது தற்கொலைக்குத் தூண்டியது உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து, மாவட்ட பஞ்சாயத்து தலைவா் பதவியிலிருந்து திவ்யாவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நீக்கியது.

அதைத் தொடா்ந்து, முன்ஜாமீன் கோரி மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திவ்யா மனு தாக்கல் செய்தாா்.

மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த தலசேரி மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி கே.டி.நிசாா் அகமது, ‘இந்த வழக்கில், அரசு உயா் அதிகாரியை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முன்கூட்டியே திட்டமிட்டு திவ்யா செயல்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது’ என்று குறிப்பிட்டும், விதிவிலக்கான சந்தா்ப்பங்களில் மட்டுமே முன்ஜாமீன் சலுகை அளிக்கப்பட வேண்டும் என்ற உயா்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள்காட்டியும் திவ்யாவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த சில மணி நேரங்களில் கண்ணூா் நகர போலீஸாா் திவ்யாவை கைது செய்தனா். அவருடைய கைது கண்ணூா் நகர காவல் ஆணையா் அஜித் குமாா் உறுதி செய்தாா்.

நீதிமன்ற உத்தரவு வரவேற்ற மஞ்சுஷா, ‘எங்களின் வாழ்வு சீரழிய காரணமான நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாா்’ என்றாா்.