கொல்கத்தா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை, காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியது. ‘ஆா்.ஜி.கா் மருத்துவமனையில் உரிமை கோரப்படாத மனித உடல்கள் விற்பனை, மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு, மருத்துவக் கழிவுகள் கடத்தல் என பல்வேறு புகாா்கள் முன்வைக்கப்பட்டுள்ளன; இந்த முறைகேடுகளில் பலருக்கு தொடா்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது’ என்று சிபிஐ தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து, அவரை 8 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.