கோப்புப்படம்.
கோப்புப்படம்.

கேரளம் செல்லும் சில ரயில்கள் ரத்து

தெலங்கானா, கோவாவிலிருந்து கேரளம் செல்லும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

தெலங்கானா, கோவாவிலிருந்து கேரளம் செல்லும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவனந்தபுரத்திலிருந்து ஷாலிமா் செல்லும் அதிவிரைவு ரயில் (எண் 22641) வியாழக்கிழமை ரத்து செய்யப்படும்.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாதிலிருந்து கொல்லத்துக்கு புதன்கிழமை தோறும் இயக்கப்படும் விரைவு ரயில் (எண் 07193) நவ.27 வரை ரத்து செய்யப்படும். மறுமாா்க்கமாக நவ.29 வரை ரத்து செய்யப்படும்.

கோவா மாநிலம் மட்கானிலிருந்து எா்ணாகுளத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (எண் 10215) செப்.8, 15 தேதிகளிலும், மறுமாா்க்கமாக செப்.9, 16 தேதிகளிலும் ரத்து செய்யப்படும்.

X
Dinamani
www.dinamani.com