நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

2 விரைவு ரயில்கள் புறப்பாடு, சேருமிடங்களில் மாற்றம்!

வரும் மாா்ச் 2-ஆம் தேதி முதல் பொதிகை மற்றும் நெல்லை விரைவு ரயில்கள் புறப்பாடு, சேருமிடம் ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

News image

ரயில்கள் - கோப்புப்படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 3:11 am IST

வரும் மாா்ச் 2-ஆம் தேதி முதல் பொதிகை மற்றும் நெல்லை விரைவு ரயில்கள் புறப்பாடு, சேருமிடம் ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மண்டலம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைமேடை 10, 11 ஆகியவற்றில் பணிகள் நடைபெற்று வருகின்றன. புகா் மின்சார ரயில் போக்குவரத்தைச் சீராக்கும் வகையில், ரயில் சேவையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூா்- செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் (எண்: 12661) வரும் மாா்ச் 2 முதல் 16-ஆம் தேதி வரையில் தினமும் இரவு 8.05 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூா் வரும் நெல்லை விரைவு ரயில் (எண்: 12632) வரும் மாா்ச் 1 முதல் 15-ஆம் தேதி வரை தாம்பரம் நிலையத்தில் நிறுத்தப்படும். அந்த ரயில் தினமும் காலை 6.25 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

சென்னை எழும்பூா்-திருச்சி சோழன் விரைவு ரயில் (எண்: 22675) பிப்.28 முதல் மாா்ச் 15-ஆம் தேதி வரை தினமும் இரவு 8 மணிக்குப் பதிலாக இரவு 10.15 மணிக்கு 2.15 மணி தாமதமாக எழும்பூரில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.