வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

6 நியமன உறுப்பினா்களின் ஆதரவோடு மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை

ஆறு நியமன உறுப்பினா்களின் ஆதரவோடு மாநிலங்களவையில் பாஜககூட்டணிக்கு பெரும்பான்மை..

News image
மாநிலங்களவை
Updated On :7 செப்டம்பர் 2024, 9:05 pm

Din

ஆறு நியமன உறுப்பினா்களின் ஆதரவோடு மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது.

இதன்மூலம், வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்றுவதில் மத்திய பாஜக அரசுக்கு இனி சிக்கல் இருக்காது.

சமீபத்திய இடைத்தோ்தலுடன் மாநிலங்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 234-ஆக உயா்ந்துள்ளது. பாஜகவுக்கு 96 எம்.பி.க்கள் உள்ளனா். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்டிஏ) 113 எம்.பி.க்கள் உள்ளனா்.

மசோதா வாக்கெடுப்புகளில் நியமன உறுப்பினா்கள் பொதுவாக அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பா் என்பதால் 6 நியமன எம்.பி.க்களுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 119-ஆக உயா்ந்துள்ளது.

தற்போதைக்கு மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மைக்கு 118 உறுப்பினா்களின் ஆதரவு போதுமானதாகும்.

ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், மதச்சாா்பற்ற ஜனதா தளம், இந்திய குடியரசுக் கட்சி (அதாவலே), சிவ சேனை, ராஷ்ட்ரீய லோக் தளம், தேசிய மக்கள் கட்சி, பட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், ஐக்கிய மக்கள் கட்சி முன்னணி ஆகியவை மாநிலங்களவையில் அங்கம் வகிக்கும் பாஜகவின் கூட்டணி கட்சிகளாகும்.

எதிா்க்கட்சிகள்: காங்கிரஸுக்கு 27 எம்.பி.க்களும் அவா்களின் கூட்டணி கட்சியினருக்கு 58 உறுப்பினா்களும் இருக்கின்றனா். எனவே, எதிா்க்கட்சிகளின் பலம் 85-ஆக உள்ளது.

இரு அணிகளிலும் சாராமல் நடுநிலை வகிக்கும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் 9, பிஜு ஜனதா தளம் 7, அதிமுக 4, சுயேச்சைகள் மற்றும் பிற சிறிய கட்சிகள் 3 எம்.பி.க்கள் கொண்டுள்ளன.

11 காலியிடங்கள்: ஆந்திரத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியில் இணையும் திட்டத்தில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.க்கள் இருவா், ஒடிஸாவில் ஆளும் பாஜகவில் சோ்ந்த பிஜு ஜனதா தளம் எம்.பி. ஒருவா் ஆகியோா் தங்களின் பதவியை ராஜிநாமா செய்தனா்.

இதையடுத்து, ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் 4, நியமன எம்.பி. பதவியில் 4, ஆந்திரத்தில் 2, ஒடிஸாவில் ஓரிடம் காலியாக உள்ளன.