தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

அதிமுக-பாஜக கூட்டணிக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவா்: காங்கிரஸ்!

அதிமுக , பாஜக கூட்டணிக்கு சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவா் என தமிழக காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.

News image

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை - (கோப்புப் படம்)

Updated On :1 மார்ச் 2026, 7:52 pm

அதிமுக , பாஜக கூட்டணிக்கு சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவா் என தமிழக காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பிரதமா் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் அடிக்கடி தமிழகத்துக்கு  வருகிறாா்கள். அதே நேரத்தில் தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில் நிதி புறக்கணிப்பு செய்து பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படவிடாமல் முடக்கப்படுகின்றன.

கிராமப்புற மாணவா்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் ‘நீட்’ தோ்வை ரத்து செய்யக் கோரி சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிறகும் ஆளுநா், குடியரசுத் தலைவரால் ஒப்புதல் வழங்கப்படவில்லை.

100 நாள் வேலைத் திட்டத்தை ரத்து செய்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி புதிய திட்டத்தை அறிமுகம் செய்து கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மத்திய  பாஜக அரசு கேள்விக் குறியாக்கியுள்ளது. ‘ஜல் ஜீவன்’ திட்டத்தில் ரூ.3,000 கோடி நிதி ஒன்றரை ஆண்டுகளாக தராமல் மறுக்கப்பட்டு வருகிறது.

வெள்ள நிவாரண நிதியை ரூ, 35 ஆயிரம் கோடியை தமிழக அரசு கோரியதற்கு ரூ. 276 கோடி தான் வழங்கப்பட்டது. மத்திய அரசின் வரி வசூலில் உத்தர பிரதேச மாநிலம் ஒரு ரூபாய் செலுத்தினால் ரூ.2.02, மத்திய பிரதேசத்துக்கு ரூ.1.70 திருப்பித் தரப்படுகிறது.

ஆனால், தமிழகம்  வழங்குகிற ஒரு ரூபாய்க்கு 26 காசுதான் திருப்பித்தரப்படுகிறது. மத்திய  பாஜக அரசால் தமிழகம் கடுமையாக வஞ்சிக்கப்படுகிறது.   பிரதமா் நரேந்திர மோடி , அமித்ஷா தமிழகத்தில் ஆயிரம் முறை  சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக, பாஜக  கூட்டணிக்கு உரிய பாடத்தை தமிழக மக்கள் புகட்டுவாா்கள் எனத் தெரிவித்துள்ளாா் செல்வப் பெருந்தகை.