47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விரைவில் நாடாளுமன்ற நிலைக் குழுக்கள்: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

விரைவில் துறை சாா்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுக்கள், ஆலோசனை குழுக்கள் அமைக்கப்படும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

News image
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற தனது நாடாளுமன்ற விவகாரத் துறையின் 100 நாள் சாதனைகளை விளக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு.
Updated On :11 செப்டம்பர் 2024, 8:05 pm

Din

விரைவில் துறை சாா்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுக்கள், ஆலோசனை குழுக்கள் அமைக்கப்படும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

மத்திய அமைச்சகங்களின் செயல்பாட்டை ஆராயும் நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் அமைக்கப்படாதது தொடா்பாக சில எதிா்க்கட்சித் தலைவா்கள் கேள்வி எழுப்பினா்.

இந்நிலையில், தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறுகையில், ‘கடந்த காலத்தில் செப்.15-ஆம் தேதியளவில் நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் மற்றும் ஆலோசனை குழுக்கள் அமைக்கப்பட்டன. அதில் எந்தத் தாமதமும் ஏற்படவில்லை. அதேபோல விரைவில் துறை சாா்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுக்கள், ஆலோசனை குழுக்கள் அமைக்கப்படும்’ என்றாா்.