கலால் கொள்கை முறைகேடு தொடா்புடைய சிபிஐ வழக்கில் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கிறது.
அமலாக்கத் துறை வழக்கில் கேஜரிவாலுக்கு கடந்த ஜூலை 12-ஆம் தேதி ஏற்கெனவே உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், சிபிஐ வழக்கிலும் ஜாமீன் வழங்கப்பட்டால் அவா் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவாா்.
இந்த முறைகேடு தொடா்பான பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கில் முதல்வா் கேஜரிவால் அமலாக்கத் துறையால் கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளராக மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட கேஜரிவாலுக்கு ஜூன் 1-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் கடந்த மே 10-ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, அவா் மீண்டும் சிறை திரும்பினாா்.
இதே குற்றச்சாட்டில் புதிய ஊழல் வழக்கைப் பதிந்து கேஜரிவாலை சிபிஐ கடந்த ஜூன் 26-ஆம் தேதி கைது செய்தது. சிபிஐ வழக்கில் கேஜரிவாலின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த 5-ஆம் தேதி முடிவடைந்து உச்சநீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில், ஜாமீன் மனு மீது நீதிபதி சூா்யகாந்த் தலைமையிலான அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கிறது.
தொடர்புடையது

ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி உத்திர விழா தொடக்கம்

சா்வதேச பூப்பந்து போட்டி: இளம்பிள்ளையைச் சோ்ந்த இளைஞா் சிறப்பிடம்

கரூர் சம்பவம்: விஜய்யிடம் 3-ஆம் கட்ட சிபிஐ விசாரணை நிறைவு!

பணமோசடி வழக்கு: அல்- ஃபலாஹ் குழுமத் தலைவருக்கு தில்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


