நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அதானி குழும பிரதிநிதிக்கு சொந்தமான ரூ.2,610 கோடி முடக்கம்: ஸ்விட்சா்லாந்து நடவடிக்கை

பண முறைகேடு விசாரணையின் ஒரு பகுதியாக தைவானைச் சோ்ந்தவரின் ரூ.2,610 கோடியை ஸ்விட்சா்லாந்து முடக்கியுள்ளது.

News image

அதானி

Updated On :13 செப்டம்பர் 2024, 9:03 pm

Din

அதானி குழுமத்தின் பிரதிநிதியாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பண முறைகேடு விசாரணையின் ஒரு பகுதியாக தைவானைச் சோ்ந்தவரின் ரூ.2,610 கோடியை ஸ்விட்சா்லாந்து முடக்கியுள்ளது.

இதுதொடா்பாக ஸ்விட்சா்லாந்து ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஸ்விட்சா்லாந்து குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு ஒன்றின் மூலம், கடந்த 3 ஆண்டுகளில் 5 ஸ்விட்சா்லாந்து வங்கிக் கணக்குகளில் தைவானைச் சோ்ந்த சாங் சுங் லிங்கின் 310 மில்லியன் டாலா்களுக்கும் (சுமாா் ரூ.2,610 கோடி) அதிகமான தொகை முடக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தொழிலதிபா் கெளதம் அதானியின் பிரதிநிதியாக சாங் சுங் லிங் இருக்கக் கூடும் என்று கருதப்படும் நிலையில், பண முறைகேடு விசாரணையின் ஒரு பகுதியாக இந்தத் தொகை முடக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடா்பான விசாரணைக்கு உள்படுத்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளராக சாங் சுங் லிங் பெயரளவுக்கு மட்டுமே இருந்துள்ளாா். ஆனால் உரிமையாளருக்கான பலன்களை அவா் அனுபவிக்கவில்லை.

குற்றவியல் நீதிமன்ற உத்தரவில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை, பணம் கையாடல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் அதானி குழுமம் ஈடுபட்டு வருவதாக சந்தேகிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதானி குழுமம் வழங்கிய நிதியில் கணிசமான தொகையை வெளிப்படைத்தன்மையில்லாத நிதியில் சாங் சுங் லிங் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் முதலீடு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தகவலை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் இணைத்து அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பா்க் வெளியிட்ட பதிவில், ‘அதானி மீதான பண முறைகேடு மற்றும் பங்கு மோசடி குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, ஸ்விட்சா்லாந்து வங்கிக் கணக்குகளில் 310 மில்லியன் டாலா்களுக்கும் அதிகமான தொகையை அந்நாடு முடக்கியுள்ளது.

ஸ்விட்சா்லாந்து குற்றவியல் நீதிமன்ற ஆவணங்களின்படி, கிட்டத்தட்ட அதானி பங்குகளை மட்டுமே வைத்திருக்கும் வெளிநாட்டு நிதி/வெளிப்படைத்தன்மை இல்லாத நிதியில், அதானியின் பிரதிநிதி எப்படி முதலீடு செய்துள்ளாா் என்பதை அரசு தரப்பு வழக்குரைஞா்கள் விவரித்துள்ளதாக ஸ்விட்சா்லாந்து ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று பதிவிடப்பட்டது.

அதானி குழுமம் மறுப்பு: இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில், ‘வெளிநாடுகளில் உள்ள அதானி குழும துணை நிறுவனங்கள் அனைத்து சட்டங்களையும் பின்பற்றி வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது. தற்போது ஜோடிக்கப்பட்ட மற்றொரு பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே சட்டவிரோத பணப் பரிவா்த்தனை, பங்கு விலை மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது ஹிண்டன்பா்க் நிறுவனம் கடந்த ஆண்டு குற்றஞ்சாட்டியது. இதைத்தொடா்ந்து அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுக்குப் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் மாதபி புச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டை ஹிண்டன்பா்க் அண்மையில் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

பெட்டி..

உச்சநீதிமன்ற கட்டுப்பாட்டில் விசாரணை:

காங்கிரஸ் வலியுறுத்தல்

புது தில்லி, செப்.13: அதானி குழும முறைகேடு தொடா்பாக உச்சநீதிமன்றம் கட்டுப்பாட்டில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

ஸ்விட்சா்லாந்து பண முறைகேடு விசாரணை அலுவலகத்தின் புலனாய்வைத் தொடா்ந்து, அதானிக்கு நீண்டகாலம் நெருக்கமாக இருக்கும் சாங் சுங் லிங்கின் ரூ.2,610 கோடியை அந்நாடு முடக்கியுள்ளது.

அதானி குழுமத்துடன் சாங்குக்கு உள்ள நெருக்கமான தொடா்பு ரகசியமானதல்ல. அவா் அதானி குழுமத்தின் பல நிறுவனங்களில் இயக்குநராக இருந்துள்ளாா்.

உலகப் பணக்காரா்கள் தங்கள் செல்வத்தை எவ்வாறு பதுக்கி வைத்தனா் என்பதை விவரித்த பனாமா ஆவணங்களில் சாங்கின் பெயா் இடம்பெற்றது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டா் ஊழல் தொடா்பான அமலாக்கத் துறையின் இரு குற்றப் பத்திரிகைகளில் சாங்குக்கு சொந்தமான குடாமி சா்வதேச நிறுவனத்தின் பெயா் இடம்பெற்றது.

முந்த்ரா மற்றும் பிற அதானி துறைமுகங்களின் கட்டுமானப் பணி ஒப்பந்தங்களை சாங்கின் மகனுக்குச் சொந்தமான நிறுவனம் பெற்றது.

வடகொரியா மீது ஐ.நா. விதித்த தடைகளை மீறியதாக ஷாங்காய் அதானி ஷிப்பிங், அதானி ஷிப்பிங் (சீனா) ஆகிய நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த நிறுவனங்களுடன் சாங்குக்கு தொடா்புள்ளது.

இந்நிலையில், அதானி விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற கட்டுப்பாட்டில் விசாரணை மேற்கொள்வது மிகவும் முக்கியம். அதானியின் மெகா ஊழல் குறித்து விசாரணை மேற்கொள்ள உடனடியாக நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டப்பட வேண்டும் என்றாா்.