புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

நுட்பமான விவகாரங்களால் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நியமனத்தில் தாமதம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

News image

கோப்புப்படம்.

Updated On :14 செப்டம்பர் 2024, 7:12 pm

நுட்பமான விவகாரங்கள் காரணமாக உயா்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமிக்கும் பரிந்துரைகளை செயல்படுத்தாமல் தாமதித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரைக்கும் நீதிபதிகளை நியமித்து அறிவிப்பு வெளியிட மத்திய அரசுக்கு கால வரம்பு நிா்ணயிக்கக் கோரி, ஹா்ஷ் விபோா் சிங்கல் என்ற வழக்குரைஞா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் அட்டா்னி ஜெனரல் ஆா். வெங்கடரமணி ஆஜராகி வாதிடுகையில், ‘நுட்பமான விவகாரங்கள் காரணமாக, உயா்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகளை நியமிக்கும் உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரைகளை செயல்படுத்தாமல் மத்திய அரசு தாமதித்து வருகிறது.

அந்த விவகாரங்கள் குறித்து பொதுவெளியில் வெளியிடுவது உச்சநீதிமன்றத்துக்கும், சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கும் நல்லதல்ல. இதுதொடா்பான தகவல்கள் மற்றும் பரிந்துரைகளை சீலிடப்பட்ட உரையில் உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பிக்க விரும்புகிறேன்’ என்றாா்.

இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்.20-க்கு ஒத்திவைக்கப்பட்டது.