போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

ஜம்மு-காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் நடந்த வெவ்வேறு என்கவுன்டரில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

News image
கோப்புப் படம்
Updated On :14 செப்டம்பர் 2024, 1:47 pm

DIN

ஜம்மு-காஷ்மீரில் நடந்த வெவ்வேறு என்கவுன்டரில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலையொட்டி தோடாவில் பாஜக சார்பில் சனிக்கிழமை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார் .

இப்பொதுக்கூட்டத்தை அமைதியாகவும் சுமுகமாகவும் நடத்துவதை உறுதி செய்ய தோடா மற்றும் கிஷ்துவார் ஆகிய இரட்டை மாவட்டங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த உளவுத்துறை தகவலையடுத்து பாதுகாப்புப்படையினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் இணைந்து இந்த கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதனிடையே கதுவாவில் வெள்ளிக்கிழமை நடந்த மற்றொரு என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேலும் அப்பகுதியில் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட பங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கிஷ்துவாா் மாவட்டத்தின் நைத்காம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகளுடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது 2 ராணுவ வீரா்கள் வீரமரணமடைந்தனா்.

2 வீரா்கள் படுகாயமடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.