யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

முதல்வரின் தனிச் செயலாளர் எனக் கூறி மோசடி செய்த நபர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் முதல்வரின் தனிச் செயலாளர் எனக் கூறி ஏமாற்றிய நபர் காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News image
கோப்புப் படம்
Updated On :14 செப்டம்பர் 2024, 6:00 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் முதல்வரின் தனிச் செயலாளர் எனக் கூறி ஏமாற்றிய நபர் காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் அசம்கர் மாவட்டத்திலுள்ள சஹாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஃபரூக் அமன் (26). இவர் தன்னை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தனிச் செயலாளர் எனக் கூறி போட்டித் தேர்வுகளில் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி வெற்றிபெற வைப்பதாக அங்குள்ள மக்களிடம் பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளார். மேலும், அந்தப் பகுதியில் ஆன்லைன் சூதாட்டத்தையும் நடத்தி வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடந்த வியாழன் (செப். 12) அன்று காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினரால் லக்னௌவில் வைத்து ஃபரூக் கைது செய்யப்பட்டார். இவர் மீது சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அவரிடமிருந்து 2 மொபைல் போன்கள், ஆதார் கார்டுகள் மற்றும் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, கடந்த ஜூன் 24 அன்று உத்தரப் பிரதேச முதல்வரின் தனிச் செயலாளர் எனக்கூறி மக்களை ஏமாற்றி வந்த விவேக் சர்மா என்னும் பண்டு சௌதாரி என்கிற நபரை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர்.

இந்த நபர் பல்வேறு அரசு அலுவலர்களை செல்போனில் அழைத்து தன்னை முதல்வரின் தனிச்செயலாளர் என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும், ட்ரூகாலர் செயலியில் விவேக் தனது பெயரை முதல்வர் யோகி ஆதித்யநாத் என்று சேமித்திருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர் தனது குற்றத்தை சில நாள்களுக்கு முன்னர் ஒப்புக் கொண்டதால் இவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அலிகார், மதுரா, பல்ராம்பூர், கான்பூர் நகர், ஹர்தோய் ஆகிய நகரங்களிலும் விவேக் மீது பல மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.