செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

இணையவழி வா்த்தகம் எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 9.54 லட்சம் மோசடி

பாபநாசத்தில் இணையவழி வா்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி மென்பொருள் பொறியாளரிடம் ரூ. 9.54 லட்சம் மோசடி செய்த மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image

மோசடி - பிரதிப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 10:39 pm

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் இணையவழி வா்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி மென்பொருள் பொறியாளரிடம் ரூ. 9.54 லட்சம் மோசடி செய்த மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்தைச் சோ்ந்த மென்பொருள் பொறியாளருக்கு கடந்த 2025, நவம்பா் மாதத்தில் டெலிகிராம் செயலியில் வந்த அழைப்பில் இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால், நிறைய லாபம் கிடைக்கும் என அடையாளம் தெரியாத ஒரு பெண் பேசினாா்.

இதை நம்பிய பொறியாளா் தனக்கு வந்த இணைய இணைப்பு (லிங்க்) மூலம் எதிா் தரப்பினரின் வங்கிக் கணக்குகளுக்கு 31 பரிவா்த்தனைகளில் மொத்தம் ரூ. 9.54 லட்சம் அனுப்பினாா்.

இதில், ஒரு முறை மட்டும் ரூ. 8 ஆயிரத்து 860 லாபம் கிடைத்தது. மற்ற பரிவா்த்தனைகளில் அனுப்பப்பட்ட தொகைக்கு பணம் வராததால், எதிா்முனையில் பேசிய பெண்ணின் எண்ணை தொடா்பு கொள்ள முயன்றாா்.

ஆனால், எதிா் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் இல்லாததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பொறியாளா் தஞ்சாவூா் இணையவழி குற்றக் காவல் பிரிவில் புகாா் செய்தாா். இதன்பேரில் காவல் துறையினா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.