கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தில்லி முதல்வர் முகம் மாறும்.. ஆம் ஆத்மியின் குணம் மாறாது: பாஜக குற்றச்சாட்டு!

தில்லி முதல்வரை மாற்றுவதால் ஆம் ஆத்மியின் குணம் மாறாது என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

News image
தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா
Updated On :17 செப்டம்பர் 2024, 12:55 pm

DIN

தில்லி முதல்வரை மாற்றுவதால் ஆம் ஆத்மியின் குணம் மாறாது என்றும், கடந்த 10 ஆண்டுகளில் தில்லியில் நடைபெற்றுள்ள ஊழலுக்கு அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் பாஜக தெரிவித்துள்ளது.

தில்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவால் தான் பதவி விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த அமைச்சரான அதிஷிக்கு முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டது.

பாஜக கருத்து

இதுகுறித்து தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகையில், “முகத்தை மாற்றுவதால் ஆம் ஆத்மி கட்சியின் குணம் மாறாது. கேஜரிவாலின் 10 ஆண்டுகால ஊழலை கருத்தில் கொண்டு, யார் முதல்வராக இருந்தாலும், தில்லி மக்களை எப்படி கொள்ளையடித்தார்கள் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும். அவர்கள் ஒவ்வொரு துறையிலும் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். இப்போது அந்த ஊழலுக்கு மக்கள் பதில் சொல்வார்கள்” என்றார்.

பினாமி முதல்வர்

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூன்வாலா கேஜரிவாலை கடுமையாக தாக்கி பேசுகையில், “முன்னதாக சிறையில் இருந்து செயல்படும் முதல்வர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த முதல்வர்.

இப்போது பினாமி முதல்வராக செல்வாக்கு இல்லாத ஒருவர் தலைமைக்கு கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது. தில்லி முதல்வர் நாற்காலி அரவிந்த் கேஜரிவாலுக்கு சொந்தமானது என்றும் அது அப்படியே இருக்கும் என்றும் ஆம் ஆத்மி தலைவர்களே கூறியுள்ளனர். இதன் அர்த்தம் முகம் மாறும், அவர்களின் குணம் மாறாது.

தில்லியின் முதல்வராக கேஜரிவாலுக்குப் பதிலாக அதிஷி பதவியேற்றதால் ஆம் ஆத்மியின் தன்மை மாறாது” என்றார்.

பேரவைத் தேர்தல்

தில்லி முதல்வராக பொறுப்பேற்றுள்ள அதிஷி, கல்வி, நீர்வளத்துறை, பொதுப்பணித் துறை மற்றும் நிதி உள்ளிட்ட பல துறைகளை வைத்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீனில் வெளியேவந்த அரவிந்த் கேஜரிவால், ஞாயிற்றுக்கிழமை பதவியை ராஜிநாமா செய்வதாகவும், மக்கள் நேர்மையானவர் எனக் கூறினால் மட்டுமே மீண்டும் தலைமைப் பதவிக்கு வருவேன் என்றும் அறிவித்தார். நவம்பரில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தில்லி சட்டசபையில் உறுப்பினர்களின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ஆம் தேதியுடன் முடிவடைகிறது, மேலும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.