தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மணிப்பூர்: அமைச்சர் வீடு மீது வெடிகுண்டு வீச்சு

மணிப்பூர் மாநில அமைச்சர் காஷிம் வசும் வீட்டின் மீது கையெறி குண்டுகள் வீசி அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Updated On :17 செப்டம்பர் 2024, 12:17 am

இம்பால்: மணிப்பூர் மாநில அமைச்சர் காஷிம் வசும் வீட்டின் மீது கையெறி குண்டுகள் வீசி அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

காஷிம் வசும், மாநிலத்தில் ஆளும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான நாகா மக்கள் முன்னணி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார். உக்ருல் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் சனிக்கிழமை இரவு இச்சம்பவம் நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பின்போது வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வீட்டின் சுவர் மற்றும் சில பகுதிகள் மட்டுமே சேதமடைந்தன.

இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை; சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையில், டாங்குல் நாகா பழங்குடியின சமூகத்தின் உச்ச அமைப்பான டாங்குல் நாகா லாங், இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்ததுடன், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யுமாறு காவல்துறையை வலியுறுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.