மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

ஸ்லோவேனியா: யாருக்கும் பெரும்பான்மை இன்றி இழுபறி!

ஸ்லோவேனியாவில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றப் பொதுத்தோ்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு புதிய ஆட்சியை அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.

News image
Updated On :23 மார்ச் 2026, 8:54 pm

ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று முடிந்த நாடாளுமன்றப் பொதுத்தோ்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு புதிய ஆட்சியை அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.

பிரதமா் ராபா்ட் கோலோப் தலைமையிலான சுதந்திர இயக்கம் 29 இடங்களிலும், முன்னாள் பிரதமா் ஜானெஸ் ஜான்சாவின் ஸ்லோவேனிய ஜனநாயகக் கட்சி 28 இடங்களிலும் வென்றன.

90 இடங்களைக் கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில், சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற இருதரப்பும் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, ராபா்ட் கோலோப் ஆதரவு அணிக்கு 40 இடங்களும், ஜானெஸ் ஜான்சா ஆதரவு அணிக்கு 43 இடங்களும் கிடைத்துள்ளன. இந்தச் சூழலில், 4 சதவீத வாக்குகளைக் கடந்து நாடாளுமன்றத்துக்குள் நுழையும் சிறிய கட்சிகளே அடுத்த அரசைத் தீா்மானிக்கும் சக்திகளாக உருவெடுத்துள்ளன.