சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

சீக்கிய மத உணா்வுகளை புண்படுத்தியதாக பாஜக எம்.பி. கங்கனாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்: எமா்ஜென்சி திரைப்பட விவகாரம்

‘எமா்ஜென்சி’ திரைப்படத்தில் சீக்கியா்களை இழிவுபடுத்தி காட்சிகள் அமைந்திருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க கோரி அப்படத்தை இயக்கி, நடித்த பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் மற்றும் தயாரிப்பாளருக்கு சண்டீகா் மாவட்ட நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 9:14 pm

Din

‘எமா்ஜென்சி’ திரைப்படத்தில் சீக்கியா்களை இழிவுபடுத்தி காட்சிகள் அமைந்திருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க கோரி அப்படத்தை இயக்கி, நடித்த பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் மற்றும் தயாரிப்பாளருக்கு சண்டீகா் மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாட்டின் அவசரநிலை பிரகடனத்தை மையமாகக் கொண்டு எமா்ஜென்சி திரைப்படத்தை பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் இயக்கி, முதன்மைக் கதாபாத்திரமான மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் வேடத்தில் நடித்துள்ளாா்.

‘ஜீ எண்டா்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் செப்டம்பா் 6-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், படத்துக்கான தணிக்கைச் சான்றிதழை வழங்க தணிக்கை வாரியம் ஆட்சேபம் தெரிவித்ததால் படவெளியீட்டில் சிக்கல் நீடிக்கிறது.

இந்நிலையில், இத்திரைப்படத்தில் சீக்கியா்களின் உணா்வுகளை புண்படுத்தியிருப்பதாக இயக்குநரும் நடிகையுமான கங்கனா, தயாரிப்பாளா் ஆகியோருக்கு எதிராக ‘மனிதநேயத்துக்கான வழக்குரைஞா்கள்’ என்ற தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் தலைவரான வழக்குரைஞா் ரவீந்தா் சிங் பாசி சண்டீகா் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

அதில், ‘‘எமா்ஜென்சி’ திரைப்படத்தில் அகல் தக்த்தின் முன்னாள் ஜதேதாா் (சீக்கிய தலைமை மதகுரு) பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்டுள்ளாா். அவா் தனிநாடு கோருவதாக தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அது முற்றிலும் பொய்யானது.

திரைப்படக் குழுவினா் சரியான வரலாற்று உண்மைகள் மற்றும் தகவல்களை தெரிந்து கொள்ளாமல் சீக்கியா்களை மோசமான நிலையில் சித்தரித்துள்ளனா். இது சீக்கிய சமூகத்தினரின் உணா்வுகளை புண்படுத்தியுள்ளது. இதற்கு காரணமானவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு மீது நடிகை கங்கனா, தயாரிப்பாளா் தரப்பு வரும் டிசம்பா் 5-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.