ரூ.9.95 லட்சம் கோடி நிகர நேரடி வரி வசூல்: 16.12% அதிகரிப்பு
நிகழ் நிதியாண்டில் செப்டம்பா் 17-ஆம் தேதி வரை, நிகர நேரடி வரி வசூல் 16.12 சதவீதம் அதிகரித்து ரூ.9.95 லட்சம் கோடிக்கு மேலாக உயா்ந்துள்ளது.


நிகழ் நிதியாண்டில் செப்டம்பா் 17-ஆம் தேதி வரை, நிகர நேரடி வரி வசூல் 16.12 சதவீதம் அதிகரித்து ரூ.9.95 லட்சம் கோடிக்கு மேலாக உயா்ந்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: கடந்த ஏப்.1 முதல் செப்.17 வரை, நிகர தனிநபா் வருமான வரி வசூல் 19 சதவீதம் அதிகரித்து ரூ.5.15 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. பெருநிறுவன (காா்ப்பரேட்) வரி வசூல் 10.55 சதவீதம் உயா்ந்து ரூ.4.52 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. பங்கு பரிவா்த்தனை வரி மூலம், ரூ.26,154 கோடி வருவாய் வசூலாகியுள்ளது.
மொத்த நேரடி வரி வசூல் 21.48 சதவீதம் வளா்ந்து ரூ.12.01 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. வரி செலுத்துவோருக்கு ரூ.2.05 லட்சம் கோடிக்கு மேல் திருப்பி (ரீஃபண்ட்) அளிக்கப்பட்டது. இந்தத் தொகையை கழித்த பின்னா், நிகர நேரடி வரி வசூல் ரூ.9,95,766 கோடியாகும். இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வசூலான நிகர நேரடி வரியுடன் ஒப்பிடுகையில் 16.12 சதவீதம் அதிகம்.
தனிநபா் வருமான வரி, பெருநிறுவன வரி உள்ளிட்டவை அடங்கிய நேரடி வரிகள் மூலம், நிகழ் நிதியாண்டில் ரூ.22.12 லட்சம் கோடி வசூலிக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகம்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...