தீபாவளி விடுமுறை எதிரொலி: நாளை சென்னை மெட்ரோவில் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை!தீபாவளி விடுமுறை: நாளை (நவ. 9) ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!உலகில் காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் சென்னை! பட்டாசு கழிவுகளை அகற்ற சென்னையில் 600 தூய்மைப் பணியாளர்கள்!மேக்கேதாட்டு அணை: யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை: விஜய்க்கு கர்நாடக முதல்வர் பதில்!

மோடியை சந்திக்கிறார் டிரம்ப்!

பிரதமர் மோடி, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் சந்திப்பு பற்றி...

modi

பிரதமர் நரேந்திர மோடி - அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்(கோப்புப்படம்) - ANI

Updated On :

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மோடியுடன் டிரம்ப் சந்திப்பு

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைமையில் டெலாவோ் மாகாணத்தில் உள்ள வில்மிங்டனில் செப்டம்பா் 21-ஆம் தேதி நடைபெறும் 4-ஆவது க்வாட் தலைவா்கள் வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி கலந்து கொள்கிறாா்.

இதற்காக, அமெரிக்காவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (செப்டம்பா் 21) தொடங்குகிறாா்.

இந்த நிலையில், மிச்சிகனின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட டிரம்ப், அடுத்த வாரம் மோடியை சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த சந்திப்பானது எப்போது, எங்கே நடைபெறும் என்பது குறித்து விளக்கம் அளிக்கவில்லை.

மேலும், இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா பெரியளவில் துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும் டிரம்ப் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

மோடி - டிரம்ப் இடையேயான நட்பு

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி வகித்த காலகட்டத்தில் மோடியுடன் நெருங்கிய நட்பைப் பகிர்ந்து கொண்டார்.

இதற்கு அமெரிக்காவில் நடந்த ‘ஹெளடி மோடி’ நிகழ்வும், இந்தியாவில் நடைபெற்ற ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்வும் சான்றாக உள்ளன.

வருகின்ற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மோடியை குடியரசுக் கட்சி வேட்பாளரான டிரம்பை சந்திக்கவுள்ளதாக அறிவித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.