கர்நாடகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான முனிரத்னா மீது காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஏற்கெனவே, ஒப்பந்ததாரரை சாதி ரீதியாக பேசி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பாலியல் வழக்கு
ராஜேஸ்வரி நகர் சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினரும் பாஜகவை சேர்ந்தவருமான முனிரத்னா மீது பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் ராம்நகரா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.
அந்த பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ. முனிரத்னா உள்பட 7 பேர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டிய பெண்ணிடம் காவல்துறை துணை ஆணையர் வாக்குமூலம் பெற்றார்.
அவரின் வாக்குமூலத்தில், தனியார் விடுதியில் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
சிறையில் எம்.எல்.ஏ.
ஒப்பந்ததாரரை சாதியைக் குறிப்பிட்டு அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு அக்ரஹாரா சிறையில் முனிரத்னா அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், முனிரத்னாவுக்கு எதிராக ஒக்கலிகா மற்றும் தலித் சமூக அமைப்புகள் போராட்டத்தை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை பாஜகவுக்கு எதிரான ஆயுதமாக காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.