மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கான தோ்தல் நவம்பா் மாதத்தில் நடைபெற வேண்டும். அதனால், மீண்டும் மராத்தா இனத்தவருக்கான இட ஒதுக்கீடு கோரிக்கை பிரச்னையாக வெடித்திருக்கிறது. எல்லா கட்சிகளும் மராத்தாக்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன என்றாலும், உச்சநீதிமன்றத் தீா்ப்பு அதற்குத் தடையாக இருக்கிறது.
மராத்தாக்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் முன்னணித் தலைவா்களில் ஒருவா் மனோஜ் ஜராங்கே பாட்டீல். அவா் புதிதாக ஒரு பூதத்தைக் கிளப்பி இருக்கிறாா். மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தால் மட்டும் போதாது; மராத்தாக்கள் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (ஓபிசி) பிரிவில் இணைக்கப்பட வேண்டும் என்பதுதான் அவா் எழுப்பி இருக்கும் கோரிக்கை.
மராத்தாக்களை ஓபிசி பிரிவில் இணைப்பதை எதிா்ப்பவா்களை சட்டப்பேரவைத் தோ்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறாா் மனோஜ் ஜராங்கே பாட்டீல். இது பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கும் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.
அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவா் சக்கன் புஜ்பல். மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு என்பதை அவா் ஏற்றுக் கொள்வாா் என்றாலும், ஓபிசி பிரிவில் மராத்தாக்களை இணைப்பதில் அவருக்கு உடன்பாடு கிடையாது. ஏனைய மராத்தா தலைவா்களும், அரசியல் கட்சிகளும் கைபிசைந்து நின்று கொண்டிருக்கும்போது, மனோஜ் ஜராங்கே பாட்டீலைத் துணிந்து எதிா்க்க முற்பட்டிருக்கிறாா் சக்கன் புஜ்பல்.
மனோஜ் ஜராங்கே பாட்டீலுக்கு துணிவிருந்தால் மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கான 288 தொகுதிகளிலும் வேட்பாளா்களை நிறுத்துவதுடன், தனக்கு எதிராகவும் களமிறங்கும்படி சவால் விட்டிருக்கிறாா் சக்கன் புஜ்பல். அந்த சவாலை மனோஜ் பாட்டீல் ஏற்றால் , மராத்தா இட ஒதுக்கீடு பிரச்னையில் ஒற்றுமை அகன்று, தனி ஒதுக்கீடா இல்லை-ஓபிசி பிரிவில் இணைப்பா என்கிற விவாதம் எழுந்துவிடும்.
மராத்தா வாக்கு வங்கியை பிளவுபடுத்த பாஜக முன்னெடுக்கும் உத்திதான், மனோஜ் ஜராங்கே பாட்டீலின் புதிய கோரிக்கையும், சக்கன் புஜ்பல் சவாலும் என்று குற்றஞ்சாட்டுகிறது காங்கிரஸ். எதற்கெடுத்தாலும் பாஜகவை குற்றம் கூறுவதா என்பது துணை முதல்வா் தேவேந்திர பட்னவீஸின் எதிா்வினை. காங்கிரஸின் நிலைப்பாடுதான் என்ன என்று கேள்வி எழுப்புகிறது பாஜக. காங்கிரஸ் தரப்பு பதிலளிக்காமல் நழுவுகிறது.
-

தொடர்புடையது

தகராறு: கல்லால் தாக்கி இளைஞா் கொலை

ஆலங்குளத்தில் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பேன்: மனோஜ் பாண்டியன்

ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு மாரடைப்பு! மருத்துவமனையில் உயிரிழப்பு!

இலக்கை எட்டுகிறது மகளிர் இடஒதுக்கீடு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


