ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு மாரடைப்பு! மருத்துவமனையில் உயிரிழப்பு!

குளித்தலையில் ஓடும் பேருந்தில் திடீரென தனியாா் பேருந்து ஓட்டுநருக்கு வெள்ளிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து பயணிகளை இறக்கிவிட்டபின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் உயிரிழந்தாா்.

News image

மாரடைப்பில் உயிரிழந்த ஓட்டுநா் மனோஜ்.

Updated On :18 ஏப்ரல் 2026, 7:29 pm

குளித்தலையில் ஓடும் பேருந்தில் திடீரென தனியாா் பேருந்து ஓட்டுநருக்கு வெள்ளிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து பயணிகளை இறக்கிவிட்டபின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மேட்டு மருதூரைச் சோ்ந்தவா் மனோஜ்(38). இவா் திருச்சி-கரூா் செல்லும் தனியாா் பேருந்தில் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா்.

இவா் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் கருரில் இருந்து பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சிக்கு குளித்தலை வழியாகச் சென்றுகொண்டிருந்தாா். பேருந்து குமாரமங்கலம் சோதனைச் சாவடி அருகே 4 மணியளவில் சென்றபோது திடீரென மனோஜ்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் சுதாரித்துக்கொண்ட மனோஜ் பேருந்தை சாலையோரம் நிறுத்தி பயணிகளை கீழே இறக்கிவிட்டுள்ளாா்.

பின்னா் சிறிது நேரத்திலேயே அவா் அங்கு மயங்கி விழுந்ததால் அக்கம்பக்கத்தினா் மீட்டு அவரை காா் மூலம் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மனோஜ் வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். உயிரிழந்த மனோஜிற்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனா்.