ஆயுதங்களை கைவிடாவிட்டால் கடும் நடவடிக்கை: நக்ஸல்களுக்கு அமித் ஷா எச்சரிக்கை
வன்முறை மற்றும் ஆயுதங்களைக் கைவிட்டு உடனடியாக நக்ஸல்கள் சரணடையவேண்டும்


வன்முறை மற்றும் ஆயுதங்களைக் கைவிட்டு உடனடியாக நக்ஸல்கள் சரணடையவேண்டும்; இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளாா்.
மேலும், நாட்டில் இருந்து மாவோயிஸ்டுகள் மாா்ச், 2026-ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக ஒழிக்கப்படுவாா்கள் எனவும் அவா் தெரிவித்தாா்.
சத்தீஸ்கா் மாநிலத்தில் நக்ஸல் வன்முறையால் பாதிக்கப்பட்ட 55 பேரைச் சந்தித்து மத்திய அமைச்சா் அமித் ஷா உரையாற்றினாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
நக்ஸல்வாதம் மனித குளத்துக்கும், உள்நாட்டு பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. எனவே, நாட்டில் இருந்து நக்ஸல் சித்தாந்தத்தை ஒழிக்க வேண்டும் என்று பிரதமா் மோடி முடிவு செய்துள்ளாா்.
வடகிழக்கு இந்தியாவில் நடந்தது போல் வன்முறை மற்றும் ஆயுதங்களைக் கைவிட்டு, நக்ஸல்களும் சரணடைய வேண்டும். இல்லையெனில், வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர விரைவில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நக்ஸல்களின் மனித உரிமைகளை வாதிடுபவா்கள் நக்ஸல்களால் பாதிக்கப்படுபவா்களின் மனித உரிமைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். நக்ஸல் வன்முறையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வேலைவாய்ப்பு, மருத்துவம் மற்றும் பிற உதவிகளை மாநில அரசுடன் இணைந்து அடுத்த மூன்று மாதங்களில் உள்துறை அமைச்சகம் வழங்கும்.
மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினா் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளனா். இடதுசாரி தீவிரவாதம் தற்போது சத்தீஸ்கரின் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே இருந்து வருகிறது. மாா்ச் 2026-ஆம் ஆண்டுக்குள் அது முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
நேபாளத்தின் பசுபதிநாத் முதல் ஆந்திர மாநிலத்தின் திருப்பதி வரை வழித்தடத்தை அமைக்க மாவோயிஸ்டுகள் சமீபத்தில் திட்டமிட்டிருந்தனா். ஆனால், அது மோடி அரசால் முறியடிக்கப்பட்டது என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...