முஸ்லிம் பகுதியை பாகிஸ்தான் என அழைத்த நீதிபதி! உச்சநீதிமன்றம் கண்டனம்

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது பற்றி...
Supreme Court
உச்சநீதிமன்றம்
Published on
Updated on
1 min read

முஸ்லிம் பகுதியை பாகிஸ்தான் என்று அழைத்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், நீதிபதியின் சர்ச்சை கருத்துகள் குறித்து இரண்டு வாரத்துக்குள் அறிக்கை அளிக்குமாறு உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சர்ச்சை கருத்துகள்

நில பிரச்னை சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஸ்ரீஷானந்தா, பெங்களூருவில் முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதியை பாகிஸ்தான் எனத் தெரிவித்தார்.

மேலும், மற்றொரு வழக்கில் ஆஜரான பெண் வழக்கறிஞரை பார்த்து, உள்ளாடை குறித்து அருவருக்கத்தக்க கருத்தை பேசியுள்ளார்.

இந்த இரண்டு சம்பவங்களும் இணையத்தில் வெளியாகி கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

உச்சநீதிமன்றம் கண்டனம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் வெள்ளிக்கிழமை காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

“உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கருத்துக் கட்டுப்பாடு தேவை. நீதிபதிகள் எத்தகைய கருத்துகளை தெரிவிக்க வேண்டுமென வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நாம் அனைவரும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்த விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் இரண்டு வாரத்துக்குள் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com